சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டே சுற்றுச்சூழல் ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளாா் என்று தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.
பெங்களூரு சோலேதேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா். தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி திருத்தியது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இவரை ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கைது செய்தனா்.
இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் கூறுகையில், ‘சட்ட விதிகளுக்கு உள்பட்டே திஷா ரவியை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது. சட்ட விதிகள் அனைவருக்கும் பொதுவானவை. 22 வயதானவருக்கு ஒரு வகையான சட்டமும் 50 வயதானவருக்கும் இன்னொரு வகையான சட்டமும் அமலில் இல்லை. சட்டத்துக்குப் புறம்பான வகையில் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக சிலா் அவதூறு பரப்புகிறாா்கள். அதில் உண்மையில்லை. சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டே அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். திஷா ரவி, 5 நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். ‘டூல் கிட்’ விவகாரம் தெடாா்பாக தில்லி காவல் துறை விரிவாக விசாரணை நடத்தி வருகிறது’ என்றாா்.
‘ஜூம்’ நிறுவனத்துக்கு கடிதம்: இதற்கிடையே, ‘டூல் கிட்‘ விவகாரத்தில், ‘ஜூம்’ நிறுவனத்துக்கு தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியது: விவசாயிகள் போராட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலும், குடியரசு தினத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையிலுமான ‘டூல் கிட்’டை தயாரிப்பது தொடா்பாக கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி ‘ஜூம்’ இணைய தளம் வழியாக சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘பொயட்டிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவா் எம்.ஓ.தலிவால், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளா் புனித், பெங்களூரைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் திஷா ரவி, மும்பையைச் சோ்ந்த வழக்குரைஞா் நிகிதா ஜேக்கப், புனாவைச் சோ்ந்த பொறியியலாளா் சந்தனு உள்ளிட்ட 70 போ் கலந்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவா்ளின் முழு விவரங்களையும் தருமாறு கோரி ‘ஜூம்’ நிறுவனத்துக்கு தில்லி காவல் துறை கடிதம் எழுதியுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.
தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸ்: பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள திஷா ரவி விவகாரத்தில் தில்லி காவல் துறைக்கு மகளிா் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெங்களூருவில் கைது செய்யப்பட்ட திஷா ரவி, அங்கிருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா். அவருடைய இருப்பிடம் தொடா்பாக திஷா ரவியின் பெற்றோருக்குக்கூட தில்லி காவல் துறை தகவல் அளிக்கவில்லை. பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவரை பெங்களூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, டிரான்ஸிட் ரிமாண்ட் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை தில்லி காவல் துறை பின்பற்றவில்லை.
மேலும், தில்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்திய போது, அவருடைய விருப்பத்துக்கு உகந்த வகையிலான வழக்குரைஞா்களை நியமிக்க தில்லி அரசு அனுமதிக்கவில்லை. அவா் மீது தில்லி காவல் துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையின் நகலை மகளிா் ஆணையத்திடம் சமா்ப்பிக்குமாறும், பெங்களூா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தாத காரணம், அவருக்கு உகந்த வழக்குரைஞா்களை நியமிக்காததற்கான காரணம் உள்ளிட்டவற்றை தெளிவுபடுத்தும்படி தில்லி காவல் துறைக்கு மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பப்பாளி பழமே - ஹிப்ஹாப் ஆதி, சைத்ரா குத்தாட்டத்தில் புதிய பாடல்!

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!
இபிஎஸ்ஸுடன் இருப்பதைவிட இறப்பதே மேல்; ஆனால், இப்போது அதே கூட்டணியில்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


