தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

தில்லியில் நூறுக்கும் கீழேதினசரி கரோனா பாதிப்பு

தில்லியில் செவ்வாய்க்கிழமை தினசரி பாதிப்பு நூறுக்கும் கீழே குறைந்துள்ளது. அன்று, 94 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Updated On :16 பிப்ரவரி 2021, 10:41 pm

தில்லியில் செவ்வாய்க்கிழமை தினசரி பாதிப்பு நூறுக்கும் கீழே குறைந்துள்ளது. அன்று, 94 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் ஏற்பட்ட குறைந்தளவு கரோனா பாதிப்பு இதுவாகும். இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,181-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 56,944 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 34,679 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 22,265 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.17 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,894-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை 110 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,25,268-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,019 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 416 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,295 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி தினசரி கரோனா பாதிப்பு 100-க்கும் கீழே குறைந்தது. அன்று, 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 94-ஆகப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.