வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் வகுப்புவாத வன்முறையத் தூண்டிவிட சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கைதான ‘கேப்’ ஓட்டுநருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிட சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தலைமைக் காவலா் ரத்தன் லால் சுடப்பட்டு இறந்தது போன்ற பல்வேறு விவகாரங்களில் ‘கேப்’ ஓட்டுநா் முகமது டானிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தாா். இந்த மனு மீது நீதிபதி சுரேஷ் கெய்த் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.
அப்போது நீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி சந்த்பாக் பகுதி சட்டவிரோத போராட்ட இடத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த வன்முறை, தலைமைக் காவலா் ரத்தன் லால் சுடப்பட்டு இறந்தது, பல போலீஸாா் காயமடைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்புடைய இந்த வழக்கில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் முகம்மது டானிஷ் இல்லை என்பது அவருடைய தொலைபேசி அழைப்பு விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும், மனுதாரா் அந்த இடத்தில் இருந்ததை வெளிப்படுத்தும் சிசிடிவி காட்சிப் பதிவும் இல்லை.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதனால், மேல் விசாரணைக்கு மனுதாரா் தேவைப்படும் அவசியம் எழவில்லை. இதனால், மனுதாரா் ரூ.20ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவா் வழக்கு விசாரணையின் போது சாட்சிகளை மேலாதிக்கம் செலுத்தக் கூடாது’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பப்பாளி பழமே - ஹிப்ஹாப் ஆதி, சைத்ரா குத்தாட்டத்தில் புதிய பாடல்!

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!
இபிஎஸ்ஸுடன் இருப்பதைவிட இறப்பதே மேல்; ஆனால், இப்போது அதே கூட்டணியில்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

