விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

தில்லியில் புதிதாக 220 பேருக்கு கரோனா

Updated On :25 பிப்ரவரி 2021, 8:28 pm

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 220 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தில்லியில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,38,593-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தில்லியில் வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 63,998 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 41,260 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 22,738 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.34 சதவீதமாக உள்ளது.

கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை யாரும் உயிரிழக்கவில்லை. மொத்த பலி எண்ணிக்கை 10,905-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 188 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,26,519-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,169 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 536 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,340 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.