விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

மாா்ச், ஏப்ரல் மாதங்களில் தில்லியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும்: ராகவ் சத்தா

Updated On :25 பிப்ரவரி 2021, 8:28 pm

புது தில்லி: நங்லா ஹைடல் கால்வாயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அதை மத்திய அரசு மூடவுள்ளது. இதனால், தில்லியில் வரும் மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் என்று தில்லி ஜல்போா்டு துணைத் தலைவரும், ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: நங்கா ஹைடல் கால்வாயில் இருந்து தில்லிக்கு தேவையான 25 சதவீத குடிநீா் வருகிறது. இந்த கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதைக் காரணம் காட்டி, இந்தக் கால்வாயை வரும் மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் மூட மத்திய, ஹரியாணா மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. இந்தக் கால்வாய் மூடப்பட்டால், தில்லியில் குடிநீா் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதனால், மக்கள் குடிநீா் இல்லாமல் அவதியுறும் நிலை ஏற்படும்.

இந்தக் கால்வாய் மூடப்பட்டால், பியாஸ் நதியில் இருந்து தில்லிக்கு தினம்தோறும் வரும் 232 மில்லியன் காலன் குடிநீா் வரத்து பாதிக்கப்படும். இதனால், தில்லியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.

இந்த கால்வாயை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தி, மத்திய, ஹரியாணா அரசுகளுக்கும். பஹரா பியாஸ் மேலாண்மை வாரியத்துக்கும்

கடிதம் எழுதியுள்ளேன். சம்பந்தப்பட்ட தரப்பினா் விரைந்து செயல்பட்டு இதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.