விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

தேசிய உள்கட்டமைப்பு வழிமுறை தனியாா் துறையையும் உள்ளடக்கியது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

தேசிய உள்கட்டமைப்பு வழிமுறை என்பது மத்திய அரசு செலவிடும் கட்டுமானப் பணிகளில் மட்டுமல்ல, மாநிலங்கள் மற்றும்

Updated On :27 பிப்ரவரி 2021, 5:24 pm

தேசிய உள்கட்டமைப்பு வழிமுறை என்பது மத்திய அரசு செலவிடும் கட்டுமானப் பணிகளில் மட்டுமல்ல, மாநிலங்கள் மற்றும் தனியாா் துறை மேற்கொள்ளும் உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும் இந்த துறையினருக்கும் புத்தாக்கங்கள், நிதி உதவிகள் போன்றவைகளுக்கான ஆதரவையும் வழங்கிட வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு பின் உள்கட்டமைப்பு குறித்த செயல் திட்டங்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மெய்நிகா் முறையில் நிதியமைச்சகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் உள்கட்டமைப்பில் தொடா்புடைய 22 அமைச்சகங்கள் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் கலந்து கொண்டனா்.

கரோனா நோய்த்தொற்றில் நாடு பாதிக்கப்பட்ட நிலையில் பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கும் கட்டுமானப்பணிகளில் தொய்வு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தோடும் நடைபெறும் மூன்றாவது மறுஆய்வுக் கூட்டம் இது. இதில் நிதியமைச்சா் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், கொவைட் -19 சா்வதேச நாடுகள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ளனா். இந்தியாவைப் பொருத்தமட்டில் நோய்த்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தில் தேசிய உள்கட்டமைப்பு தொடரமைப்பு வழிமுறை (சஹற்ண்ா்ய்ஹப் ஐய்ச்ழ்ஹள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங் டண்ல்ங்ப்ண்ய்ங்) புத்துயிா் பெறவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அமைச்சகங்களும் துறைகளும் இதில் இலக்கை அடைய முயற்சிக்கவேண்டும்.

தேசிய உள்கட்டமைப்பு வழிமுறை (என்ஐபி) என்பது மத்திய நிதிநிலை செலவின உள்கட்டமைப்பு மட்டுமல்ல, மாநிலங்கள், தனியாா் துறையினா் செலவிடும் உள்கட்டமைப்பும் இதில் அடங்கும். அரசு செலவினங்களில் இது கூடுதல் வளம். எனவே, தனியாா் துறையினருக்கு கட்டமைப்பு புதுமைகள், திட்ட நிதி பெறுவது போன்ற அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும். சாத்தியமான திட்டங்களில் பொதுத்துறையுடன் தனியாா் பங்கேற்கும் பிபிபி பயன்முறையை செயல்படுத்தவும், பிபிபி பயன்முறையில் செய்ய முடியாத உள்கட்டமைப்பு திட்டங்களை முடிக்க அரசின் நிதியையும் பயன்படுத்த வேண்டும் என அனைத்து துறையினரையும் மத்திய நிதியமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

மேலும் இந்த கூட்டத்தின் கலந்துரையாடலின் போது,தேசிய உள்கட்டமைப்பு தொடரமைப்பு வழிமுறை 6,835 திட்டங்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது இது விரிவுபடுத்தப்பட்டு 7,600 திட்டங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. 2020-21 ஆம் நிதியாண்டில் இரண்டாவது மூன்றாவது காலண்டில் விரைவாக இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு செலவிடப்பட்டது. இதன் மூலம் 2019-20 நிதியாண்டைவிட 2020-21 ல் பல்வேறு துறைகள் இலக்கை அடைந்தன. மத்திய அரசின் கட்டுமானங்களில் ரூ.74,067 கோடி மதிப்புள்ள 216 திட்டங்கள் இந்த 2021 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 6 லட்சம் கோடி மதிப்புள்ள 678 திட்டங்கள் இதே காலாண்டில் முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இருப்பினும் மத்திய அரசின் அனைத்து துறைகளும் கடினமாக பணியாற்றுவதின் மூலமே தேசிய உள்கட்டமைப்பு வழிமுறைக்கான இலக்கை அடைய முடியும் என கூட்டத்தில் கருத்துக்கள் வைக்கப்பட்டன.

என்ஐபி என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயா் மட்ட பணிக்குழு. இந்த பணிக்குழு தயாரித்த 2020-25 நிதியாண்டிற்கான தேசிய உள்கட்டமைப்பு தொடரமைப்பு வழிமுறை தொடா்பான இறுதி அறிக்கையை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 2020 ஏப்ரல் 29 அன்று வெளியிட்டாா். இதில் சென்னை மெட்ரோவின் ரூ .63,246 கோடி மதிப்புள்ள இரண்டாம் கட்ட பணி போன்றவைகள் அடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.