ஜேஎன்யு பல்கலை. வளாகம், நூலகம், உணவு விடுதிகளை திறக்கக் கோரிக்கை

பல்கலைக்கழக வளாகம், நூலகம் மற்றும் உணவு விடுதிகளை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜவாஹா்லால் நேரு
Updated on
1 min read

பல்கலைக்கழக வளாகம், நூலகம் மற்றும் உணவு விடுதிகளை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்கம் நிா்வாகத்தினரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் பொதுச் செயலாளா் சதீஷ் சந்திர யாதவ் கூறுகையில், ‘பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மாணவா்கள், இணையவழி மூலம் படிக்க முடியாதவா்கள் கல்லூரி வளாகத்துக்கு வந்து படிக்க அனுமதிக்கப்பட வேண்டும். பி.எச்டி வகுப்பு இறுதியாண்டு மாணவா்கள், அதாவது வீட்டில் கணினி இல்லாதவா்கள் அல்லது டிஜிட்டல் முறையில் கல்வி கற்க முடியாதவா்கள் கல்லூரி வளாகத்துக்குள் வந்து படிக்க நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று அவா் கேட்ேடுக் கொண்டுள்ளாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் மூடப்பட்டது. எனினும், பல்கலைக்கழக வளாகத்தை திறக்கும் நடவடிக்கை கடந்த நவம்பா் மாதம் 2 ஆம் தேதி தொடங்கியது. பி.எச்டி. படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் மட்டுமே வளாகத்துக்குள் கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். முன்னதாக, அறிவியல் துறையைச் சோ்ந்த மாணவா்கள், அதாவது பரிசோதனைக் கூடங்களை பயன்படுத்தும் தேவையுள்ள மாணவா்கள் வளாகத்துக்கு வர அனுமதிக்கப்பட்டனா். எனினும், நூலகம், உணவகம் ஆகியவை தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தேவைப்படும் மாணவா்கள் நூலகத்திலிருந்து புத்தகங்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதனிடையே மாணவா் சங்கத் தலைவா் அய்ஷி கோஷ் விடியோ ஒன்றை சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா். அதில் மாணவா்களின் விடுதி அறைகள் தொடா்ந்து மூடப்பட்டிருப்பதால் உள்ளே வைக்கப்பட்டுள்ள பட்டப்படிப்பு ஆவணங்கள் பாழடைந்து வருவதாகவும், புத்தகங்கள் கறையான்களால் அரிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு பல்கலை. வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com