வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தில்லியில் புதிதாக 399 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 399 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,30,200-ஆக உயா்ந்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 6:38 pm

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 399 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,30,200-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 77,600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 45,116 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 32,484 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.51 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 12 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,678-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து 602 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,16,054 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,468 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 1,585 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,677 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லியில் கரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா். இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில் ‘கடந்த 15 தினங்களாக தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துவிட்டது. தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.