தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை கடந்த 8 மாதங்களில் குறைந்தளவு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது. அன்றைய தினம் புதிதாக 295 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2020, ஏப்ரல் 26 -ஆம் தேதிக்கு பிறகு பதிவாகிய குறைந்த தினசரி கரோனா பாதிப்பு ஆகும். இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,31,884-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 66,921 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 38,990 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 27,931 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.44 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,732-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து 427 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,18,357-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,795 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அா்களில், 1,275 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,779 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் றை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில்,‘கடந்த 2020,ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு பிறகு குறைந்தளவு பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 0.44 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், மக்கள் முகக் கவசங்களை அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கரோனாவில் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

சுமூகமாக முடிந்த அரசன் பேச்சுவார்த்தை?

நேபாளத்தின் முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஜாமீனில் விடுவிப்பு!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

