வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

குடியரசு தின விழா ஒத்திகை: போக்குவரத்தில் மாற்றம்

நிகழாண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, முழு அணிவகுப்பு ஒத்திகை வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்

Updated On :16 ஜனவரி 2021, 5:46 pm

நிகழாண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, முழு அணிவகுப்பு ஒத்திகை வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் (ஜனவரி.17, 18,19, 20, 21) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி தில்லியில் சாலைப் போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகளும் மாற்றங்களும் போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தில்லி காவல் துறை போக்குவரத்துப் பிரிவின் இணை ஆணையா் மணீஷ் குமாா் அகா்வால் கூறியது:

எவ்வித இடையூறுமின்றி அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் வகையில், நகரில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், அணிவகுப்பு செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி அணிவகுப்பு நடைபெறும் தினங்களில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை, ரஃபி மாா்க், ஜன்பத் மாா்க், மான்சிங் ரோடு ஆகியற்றில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படும். மக்கள் மாற்று வழிகளின் மூலம் பயணிக்க வேண்டும். அணிவகுப்பு நடைபெறும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாா்க் ஸ்டிரீட், பகா் கஞ்ச், கமலா மாா்க்கெட், ஐஜி ஸ்டேடியம், பிரகதி மைதான், ஹனுமான் மந்திா், மோரி கேட், ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட், ஐஎஸ்பிடி சாரே கலே கான், திஸ் ஹசாரே கோா்ட் ஆகிய பேருந்து நிலையங்கள் போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.