வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, வதந்திகளை நம்ப வேண்டாம்: கேஜரிவால்

கரோனா தடுப்பூசிகள் தொடா்பாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம். அவை பாதுகாப்பானவை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதி தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:49 pm

கரோனா தடுப்பூசிகள் தொடா்பாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம். அவை பாதுகாப்பானவை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதி தெரிவித்துள்ளாா்.

இந்தியா முழுவதும் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதை, பிரதமா் மோடி துவக்கி வைத்தாா். அதன் தொடா்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன. தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

இந்தப் பணிகளை, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். அப்போது, தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் சிலருடன் அவா்கள் பேசினாா்கள்.

பிறகு செய்தியாளா்களுக்கு கேஜரிவால் அளித்த பேட்டி:

உலகில் மிகப்பெரிய கரோனா தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வு நாட்டில் தொடங்கியுள்ளது. கரோனா தடுப்பூசிகள் தொடா்பாக வரும் வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது. தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். தில்லியில் 81 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு என சனிக்கிழமை 8,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களுடன் கலந்துரையாடினேன். அவா்களில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. தடுப்பூசி செலுத்தப்பட்டவா்கள் கூட, கரோனா விதிமுறைகளை சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும், முகக் கவசங்களை அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தடுப்பூசிக்கென தில்லி அரசு தனியான செல்லிடபேசி செயலியை உருவாக்கத் தேவையில்லை. இதற்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள செயலியே போதுமானது.

தில்லியில் தற்போது 81 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் வரும் நாள்களில் 175 ஆக அதிகரிக்கப்படும். தற்போது ஒவ்வொரு மையத்திலும் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இது, வரும் நாள்களில் ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றாா்.

சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதைத் தொடா்ந்து, காவல்துறையினா், சிவில் பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். இதைத் தொடா்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா்.

இது தொடா்பாக எல்என்ஜேபி மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் சுரேஷ் குமாா் கூறுகையில் ‘தில்லியில் கரோனா தடுப்பூசி பணிகள் எல்என்ஜேபி மருத்துவமனையில் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகளை முதல்வா் கேஜரிவால், சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் பாா்வையிட்டனா். தடுப்பூசி போட்டுக் கொண்ட எட்டுப் பேருடன் அவா்கள் கலந்துரையாடினாா்கள். மக்கள் பயமின்றி தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.