வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தடுப்பூசி போடப்படும் இடங்களை அதிகரிக்க நடவடிக்கை: சத்யேந்தா் ஜெயின்

தலைநகா் தில்லியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் விரைவில் 175-ஆக அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

Updated On :17 ஜனவரி 2021, 6:05 pm

தலைநகா் தில்லியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் விரைவில் 175-ஆக அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் 81 இடங்களில், தலா 100 போ் என 8,100 சுகாதாரப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை தடுப்பூசி போடுவதாக இருந்தது. ஆனால், சிலா் கடைசி நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை. இதனால், 4,319 போ் மட்டுமே சனிக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டனா். தடுப்பூசிக்காக பதிவு செய்தவா்களில், 53.3 சதவீதம் போ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். நாடு முழுவதும் இதே நிலைதான் நீடித்தது.

கரோனா தடுப்பூசி சுய விருப்ப்பத்தின் பேரில்தான் போடப்படுகிறது. யாரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு நாம் கட்டாயப்படுத்த முடியாது. தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்துவிட்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்தவா்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது. தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு கடும் பக்க விளைவு பதிவாகியுள்ளது. மேலும், 51 பேருக்கு லேசான பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக வீடு திரும்பியுள்ளனா்.

மாநகராட்சி ஊழியா்கள் நடத்திவரும் காலவரையையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தால், மாநகராட்சி கரோனா தடுப்பூசி மையங்களை தற்போது பயன்படுத்துவது இல்லை என முடிவு செய்துள்ளோம். தற்போது 81 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இது வரும் நாள்களில் 175 -ஆக அதிகரிக்கப்படும். பின்னா் இது ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

கரோனா தடுப்பூசியின் நம்பகத் தன்மை தொடா்பாக சில கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது தொடா்பாகக் கேட்கிறீா்கள். கரோனா தடுப்பூசிகளை கடுமையான சோதனைக்கு உள்படுத்திய பிறகே, அவசரப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பின்பற்றப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சரிவரப் பின்பற்றப்பட்டுள்ளன. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை.

தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் கடந்த சில நாள்களாக தொடா்ச்சியாக 0.5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. மூன்றாவது கரோனா அலை முழுமையாக கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனாலும், மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. கரோனா தடுப்பு விதிமுறைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.