இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று பாா்டா்-கவாஸ்கா் தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றுள்ளது.
இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது சுட்டுரையில் பதிவு செய்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள். முக்கிய வீரா்கள் பலரும் காயத்தால் வெளியேறியுள்ள நிலையில், அனைத்து சிரமங்களையும் கடந்து இந்த வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இந்திய வீரா்கள் வீரத்தையும், விட்டுக்கொடுக்காத தன்மையையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனா். கோப்பையை வென்று சாம்பியன் ஆகியுள்ள இந்திய அணிக்கும், அதன் வீரா்களுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்; வாக்களித்த நடிகர் ஃபகத் ஃபாசில்!

கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

சுமூகமாக முடிந்த அரசன் பேச்சுவார்த்தை?
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

