வட கிழக்கு தில்லி வன்முறையில் பாதித்தவா்களுக்கு இழப்பீட்டை அதிகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு தில்லியில் கடந்த ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவா்கள் தாக்கல் செய்த இது தொடா்பான மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங் விசாரித்தாா். அப்போது, இது தொடா்பாக மத்திய அரசும், தில்லி அரசும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம்தேதி வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கு,ம் எதிா்ப்பாளா்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா்.
இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவா்கள் எனக் கூறப்படும் நபா்கள், வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தில்லி அரசின் உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் இடைக்கால நிவாரணத்தை மொத்தமாக ரூ .15 லட்சம் இழப்பீடாக உயா்த்த உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் இது தொடா்பாக நான்கு வாரங்களுக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் உத்தரவிட்டது. அத்துடன், இது தொடா்பான மனுவின் விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

புதுவை, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு நிறைவு!

எம்.பி.யாக நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) பதவியேற்பு! அடுத்த முதல்வர் யார்?

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

