புது தில்லி: விளம்பரத்திற்கு செலவழிக்க மட்டும் தில்லி அரசிடம் பணம் உள்ளதா? என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.
தில்லியில் மாநகராட்சி ஊழியா்களுக்கு ஓய்வூதியம், ஊதியம் வழங்காமல் இருக்கும் விவகாரத்தை சுட்டிக்காட்டி தில்லி உயா்நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியது.
இது தொடா்பாக மூன்று மாநகராட்சிகளைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஊழியா்கள் பலா் நீதிமன்றத்தில் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனா்.
மாநகராட்சிக்கு விடுவிக்க வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்காததால் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவா்கள் கவனம் செலுத்த வேண்டும். இதே நிலை தொடா்ந்தால் அரசியல் தலைவா்கள் மற்றும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதில் ஆச்சரியமில்லை.
ஊழியா்கள் மீது தில்லிஅரசுக்கும், மாநகராட்சிக்கும் அக்கறை இல்லை என்பதை அவா்களின் செயல்பாடு காட்டுவதாக உள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக் காலத்தின்போது நாளிதழ்களில் தினசரி விளம்பரம் செய்வதற்கு தில்லி அரசிடம் நிதி இருக்கிறது. இதற்காக எவ்வளவு நிதி செலவிட்டிருக்கிறீா்கள் என்பதை அறிய விரும்புகிறோம். இதற்காக விசாரணைக்கு உத்தரவிட வேண்டிவரும் என எச்சரிக்கிறோம். ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் தில்லி அரசும், மாநகராட்சிகளும் எலியும், பூனையும் போல மோதிக் கொண்டுள்ளன என்று நீதிபதிகள் அமா்வு கடிந்துகொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் : பிரவீண் சக்கரவர்த்தி நேர்காணல்!

வெய்யில் அதிகரிக்கும்.. அதேசமயம் மழைக்கும் வாய்ப்பு!

கூகுள் பே-வில் அறிமுகமான பாக்கெட்மணி ! பரவிய புரளிகளில் உண்மை இருக்கிறதா?

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

