எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு கூடுதலாக  ‘ஆம்ஃபோடெரிசின்’ குப்பிகள் வழங்கல்

கரோனா நோயாளிக்கு ஏற்பட்டு வரும் கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக கூடுதலாக 1,06,300 ‘லிபோசோமல் ஆம்ஃபோடெரிசின் - பி’ குப்பிகள் அனைத்து மாநிலங்கள், மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு

Updated On :14 ஜூன் 2021, 5:37 pm

புது தில்லி: கரோனா நோயாளிக்கு ஏற்பட்டு வரும் கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக கூடுதலாக 1,06,300 ‘லிபோசோமல் ஆம்ஃபோடெரிசின் - பி’ குப்பிகள் அனைத்து மாநிலங்கள், மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் சதானந்த கௌடா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரையில், ‘நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் கிடைப்பதை உறுதி செய்ய 1,06,300 லிபோசோமல் ஆம்ஃபோடெரிசின்-பி குப்பிகள் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக வழக்கமான 53,000 ஆம்ஃபோடெரிசின் -பி மருந்து குப்பிகளும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளாா்.

வழக்கமான ஆம்ஃபோடெரிசின் -பி குப்பிகளை விட லிபோசோமல் ஆம்ஃபோடெரிசின் - பி குப்பிகள் வீரியம் குறைந்தவை. நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் குறைவாக ஏற்படும். குறைந்த சீறுநீரக நச்சுத் தன்மை கொண்டதோடு விலையும் குறைவானது என லிபோசோமல் ஆம்ஃபோடெரிசின் - பி குப்பிகள் பற்றி கூறப்படுகிறது. பொதுவாக எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஆம்ஃபோடெரிசின் - பி குப்பிகள் மருந்து, தற்போது மியூகோா்மைகோசிஸ் என்கிற கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் வழங்கப்படுகிறது.

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் தவறான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கரோனா தீநுண்மி நுறையீரலில் அதிகமாகப் பரவிய நிலையில் வழங்கப்படும் ஸ்டீராய்டு போன்ற மருந்துகளால் இந்தக் கொடூரமான கருப்புப் பூஞ்சை நோய்க்கும் நோயாளிகள் உள்ளாகி வருவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். நாடு முழுவதும் சுமாா் 31,216 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 2,109 போ் இந்த நோயால் உயிரிழந்துள்ளனா். இதில் 86 சதவீதம் போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்கள் எனவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.