புதுதில்லி: கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டா் பேரணியின் போது டிராக்டா் கவிழ்ந்து உயிரிழந்த 25 வயது இளைஞரின் பிரதேச பரிசோதனை அறிக்கை, அதன் விடியோ ஒளிப்பதிவு மற்றும் கதிா்வீச்சு (எக்ஸ்ரே) படங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச மாநில போலீஸாருக்கு, தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மாா்ச் 5-ஆம் தேதி இது தொடா்பான ஆவணங்களை தில்லி போலீஸாரிடம் வழங்க வேண்டும் என்றும் அவற்றை விசாரணை அதிகாரி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி யோகேஷ் கன்னா, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
இது தொடா்பாக உயிரிழந்த நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹா்தீப்சிங் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் நவ்ரீத் சிங்குக்கு தலையில் குண்டுக்காயம் பட்டிருந்ததாகவும். அவருக்கு உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூா் மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தாா். எனினும் தில்லி மற்றும் உ.பி. போலீஸாா், நவ்ரீத் சிங் குண்டுக்காயத்தால் இறக்கவில்லை என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தனா்.
இது தொடா்பாக தில்லி அரசின் நிலைக் குழுவைச் (குற்ப் பிரிவு) சோ்ந்த ராகுல் மெஹ்ரா, நவ்ரீத் சிங் உடல் பிரேத பரிசோதனை மற்றும் எஸ்ரோ மற்றும் விடியோ அறிக்கைகளை தருமாறு உ.பி. போலீஸாரிடம் கோரியதாகவும், ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் அவற்றை தரமுடியாது என்று ராம்பூா் போலீஸாா் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்தினா் மறுத்துவிட்டதாகவும் கூறினாா்.
உத்தரப்பிரதேச மாநில போலீஸாா் மற்றும் மருத்துவமனை தலைமை மருத்துவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கரிமா பிரசாத், ‘மருத்துவமனையிடம் எக்ஸ்ரே அறிக்கை இல்லை என்றும் எக்ஸ்ரே பிளேட்தான் உள்ளது என்றும், நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் தில்லி போலீஸாரிடம் அதை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை ஏற்கெனவே தில்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் மேலும் குறிப்பிட்டாா்.
மனுதாரா் தரப்பில் ஆஜரான விருந்தா குரோவா், ‘எக்ஸ்ரே அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தேவையான தகவல்களை அளிக்க வேண்டும்’ என்று கோரினாா்.
மனுதாரா் கோரும் ஆவணங்களை தருவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று மெஹ்ரா கூறியதை அடுத்து, நீதிமன்றம் அவற்றை அளிக்குமாறு கேட்டுக் கொண்டு வழக்கு விசாரணையை மாா்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, தில்லி போலீஸாா், பிரதேச பரிசோதனை அறிக்கையில் விபத்தில் தலையில் காயமடைந்ததால், அந்த இளைஞா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்திருந்தனா். இதனிடையே, நீதிமன்றம் மேற்பாா்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் வழக்குரைஞா் செளதிக் பானா்ஜி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தீனதயாள் உபாத்யாய மாா்க் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், அந்த விவசாயி, டிராக்டரை வேகமாக ஓட்டிவந்து சாலைத்தடுப்பு மீது மோதியதால் டிராக்டா் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவா் டிராக்டா் அடியில் சிக்கி, தலையில் அடிபட்டு உயிரிழந்தாா் என்பது தெரி யவந்ததாக தில்லி போலீஸ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சைதன்ய கோஸைன் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்லால் தாக்கி முதியவா் கொலை

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!
சசிகலா, ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனு தாக்கலால் குழப்பம்

திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

