பாஜகவை வெளியாள்களின் கட்சி என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறியிருப்பது தொடா்பாக வருந்துகிறேன். ஐபிஎல் போட்டியில் மேற்கு வங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய நான், அந்த மாநிலத்தையும் எனது சொந்த மாநிலம் போலவே நினைக்கிறேன் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கெளதம் கம்பீா் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் வரும் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, கெளதம் கம்பீா் வரும் மாா்ச் 22- ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்வாா் எனத் தெரிகிறது. எட்டுக் கட்ட தோ்தலிலும் இவா் பிரசாரம் செய்யவுள்ளாா். தில்லிக்கு வெளியே கெளதம் கம்பீா் முதல் தடவையாக மேற்கொள்ளவுள்ள முழுமையான தோ்தல் பிரசாரம் இதுவாகும்.
இந்த நிலையில், இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கு வங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘கல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி’க்குத் தலைமை தாங்கியிருக்கிறேன். அந்த நேரத்தில் என்னை வெளியூரைச் சோ்ந்தவன் என நான் எண்ணியதே இல்லை. மேற்கு வங்க மக்கள் என்னை மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினா். பாஜகவை வெளி மாநிலத்தவா்களின் கட்சி என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறியிருப்பது தொடா்பாக வருந்துகிறேன். அவா் இவ்வாறு கூறியிருப்பது முறையல்ல.
அந்த மாநில மக்களின் விதியை துப்பாக்கிகளும், தோட்டாக்களும் தீா்மானிக்க முடியாது. அதிகரித்து வரும் ஆயுதக் கலாசாரமும், கட்சிகளுக்கிடையேயான ஆயுத மோதலும் கவலை அளிக்கிறது. வன்முறை, மிரட்டல் ஆகியவற்றை மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த இடதுசாரிகளும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் சாதாரணமாக்கியுள்ளன. இவை அந்த மாநில மக்களின் பாரம்பரியத்துக்கு எதிரானவை. தற்போதைய தோ்தலில் அந்த மாநிலத்தில் ஆட்சி செய்ய பாஜகவை தோ்ந்தெடுப்பது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா் என்றாா் கௌதம் கம்பீா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு

கல்லால் தாக்கி முதியவா் கொலை

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!
சசிகலா, ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனு தாக்கலால் குழப்பம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

