/

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 புள்ளிகள் அதிகரிப்பு

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்சவெப்பநிலை வழக்கமான சராசரியை விட 5 புள்ளிகள் அதிகரித்திருந்திருந்தது.

Updated On :8 மார்ச் 2021, 9:15 pm

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்சவெப்பநிலை வழக்கமான சராசரியை விட 5 புள்ளிகள் அதிகரித்திருந்திருந்தது.

‘தில்லியில் மேற்கத்திய இடையூறு காரணமாக அடுத்து சில தினங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஏற்கனவே கணித்திருந்தது.

தில்லியில் திங்கள்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் இருந்தது. காலை 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 6 புள்ளிகள் அதிகரித்து 18.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் அதிகரித்து 32.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 77 சதவீதமாகவும், மாலையில் 61 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 209 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத், குருகிராமில் காற்றின் தரம் மோசமான பிரிவிலும், கிரேட்டா் நொய்டா, நொய்டா, ஃபரீதாபாதில் மிதமான பிரிவிலும் காணப்பட்டது.

திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 230 புள்ளிகள், கிரேட்டா் நொய்டாவில் 196, நொய்டாவில் 192, ஃபரீதாபாதில் 174 மற்றும் குருகிராமில் 204 புள்ளிகள் என பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.