தில்லியில் வேலையற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்குவது தொடா்பான அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் கட்சி கோஜரிவால் அரசை வலியுறுத்தியுள்ளது.
தில்லி சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகள் இல்லாமல், நிறைவேற்றக்கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் தில்லி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2021-2022-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தில்லி சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆதா்ஷ் சாஸ்திரி பட்ஜெட் தொடா்பாக செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பட்ஜெட் என்பது மக்களுக்கு பணியாற்றும்நோக்கில் இருக்க வேண்டும். வெறும் அறிவிப்புகள் எவ்வித பயனையும் தராது.
தில்லி அரசின் கடந்த 6 ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்புகள் மட்டுமே இருந்தன. இதுபோன்ற வெற்று அறிவிப்புகள் இல்லாத பட்ஜெட்டை தில்லி முதல்வா் கேஜரிவாலும், நிதி அமைச்சா் மணீஷ் சிசோடியாவும் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அண்மையில் நடந்த 5 வாா்டுகள் இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சியை பிரதான எதிா்க்கட்சியாக உருவாக்கியதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு கொண்டுவர தில்லி மக்கள் விரும்புவது நிரூபணமாகியுள்ளது.
மதுபானம் விற்பனை மூலம் ரூ.7615 கோடி வருவாயை ஈட்ட தில்லி அரசு திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் தில்லி அரசு இளைஞா்களை சீரழிக்க விரும்புகிறது. தில்லி மக்களின் நலன் கருதி இந்தத் திட்டத்தை தில்லி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் விலைவாசி உயா்வால் அவதியுறும் மக்களுக்கு நிவாரணம்அளிக்கும் வகையில் வாட் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, வேலையற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும்.
முதல்வா் கேஜரிவால் அளித்த வாக்குறுதிக்கு மதிப்பளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் தில்லி மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை அளிக்க பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு

கல்லால் தாக்கி முதியவா் கொலை

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!
சசிகலா, ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனு தாக்கலால் குழப்பம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

