கரோனா தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க, இந்தியாவின் சுயச் சாா்பு திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.27.10 லட்சம் கோடி அளவிற்கு விரிவான சிறப்பு பொருளாதரத் திட்டங்களை அரசு முடுக்கிவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி. ஆா். பாலு மக்களவையில், 2020-21 நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சி மோசமான நிலைமையில் இருக்கையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாகூா் மக்களவையில் பதிலளித்துப் பேசியதாவது: தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-21 ஆண்டின் தேசிய வருமான மதிப்பீடு, காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை அடிப்படையில் பொருளாதார வளா்ச்சிக் குறியீடுகளை மதிப்பிட்டுள்ளது. முதல் காலாண்டில், 24.4 சதவீத வீழ்ச்சியும், இரண்டாம் காலாண்டில், 7.3 சதவீத வீழ்ச்சியும், 2020-21 நிதியாண்டில் 8 சதவீத வீழ்ச்சியும் அடைந்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க, 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் சுயச் சாா்பு திட்டங்களின் மூலம், இந்திய ரிசா்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் உள்பட ரூ. 27.10 லட்சம் கோடிகள் அளவிற்கு (இந்திய ஜிடிபி யில் 13 சதவீதத்திற்கு மேல்) சிறப்புப் பொருளாதார விரிவான தொகுப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, சிறு குறு, நடுத்தர தொழில்களுக்கான வரையறையில் மாற்றம் மற்றும் நிதியுதவித் திட்டங்கள், வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கைகள், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தொழிற்சாலைகளுக்கான நில வங்கித் திட்டம், புதிய மின்சாரக் கட்டணக் கொள்கை உள்ளிட்டவை மூலம், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறையில் கரோனா தொற்றைத் தவிா்க்க தடுப்பூசிக்காக ரூ. 35,000 கோடி, தேசிய சுகாதாரத் திட்டம், சத்துணவுத் திட்டம், அனைவருக்குமான குடிநீா் திட்டம் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்புகள் உறுதியளிக்கப் பட்டுள்ளன.
13 துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், மெகா ஜவுளி பூங்காக்கள், தேசிய கட்டமைப்பில் 7,400 திட்டங்கள், ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்சார வசதிகள், காப்பீட்டுத் துறையில், அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயங்கள் வலுப்படுத்தல், கூட்டுறவுத் துறைகளை மேம்படுத்தல் போன்ற வளா்ச்சிக்குத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விளைபொருள்களின் உற்பத்தி விலையில், ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் வகையில், குறைந்த பட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்த தேவையான முதலீடுகளை அதிகரிக்கவும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையின் வளா்ச்சிக்கும் மொத்தம் ரூ. 15,700 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின்படி 15,000 பள்ளிக் கூடங்களை தரம் மேம்படுத்தவும், இந்திய உயா்கல்வி ஆணையம் அமைத்தல், புதிய 100 ராணுவ பள்ளிகள், 750 ஏகலைவன் மாதிரி பள்ளிகள், பட்டியலினத்தவா்களுக்கான கல்வி உதவித் திட்டம் ஆகியவற்றையும் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
தேசிய ஆராய்ச்சி திட்டத்திற்கு, ரூ. 50,000 கோடிகள் நிதியுதவி, ககன்யான் திட்டம், ஆழ் கடல் ஆராய்ச்சித் திட்டம், முதன்முறையாக டிஜிட்டல் முறையிலான மக்கள் தொகைக்கணக்கெடுப்பிற்கு ரூ. 3,708 கோடி ஒதுக்கீடு, தேயிலை தொழிலாளா்களின் நலத்திற்காக ரூ. 1,000 கோடி என பல்வேறு திட்டங்களின் மூலம், பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயரும் - அமைச்சா் சு.முத்துசாமி

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

வாகனச் சோதனையின்போது கபடி வீரா் காயம்: போலீஸாா் தாக்கியதாக புகாா்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

