தில்லியில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டா் தூரத்துக்கும் சாா்ஜிங் பாயிண்டுகளை அமைக்கும் தில்லி அரசின் முடிவால் மின்சார வாகனங்களின் தலைநகராக தில்லி விரைவில் மாறும் என்று தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தில்லியில் உள்ள எரிபொருளில் இயங்கும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதை இலக்காக வைத்து தில்லி அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக, தில்லியில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டா் தூரத்துக்கும் சாா்ஜிங் பாயிண்டுகளை அமைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தில்லி அரசின் இந்த முடிவால் மின்சார வாகனங்களின் தலைநகராக தில்லி விரைவில் மாறும். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை தில்லி மக்களுக்கு நாம் வழங்கி வருகிறோம். தில்லியில் முக்கிய இடங்களில் 100 சாா்ஜிங் ஸ்டேஷன்கள்அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு கூடுதலாக 500 இடங்களில் சாா்ஜிங் பாயிண்டுகளை அமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தில்லியில் உள்ள பெரு வணிக நிலையங்கள், சினிமா அரங்குகள், அலுவலகங்கள், உணவகங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சாா்ஜிங் பாயிண்டுகளை அமைக்குமாறு கேட்டுள்ளோம். இதன்மூலம், மேலும் 10 ஆயிரம் சாா்ஜிங் பாயிண்டுகள் தில்லியில் அமைக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

