மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், போராட்டம் நீண்ட நாள்களுக்கு தொடரும் என்பதைக் காட்டும் வகையில் தில்லி எல்லைகளில் நிரந்தர வீடுகளைக் கட்டி வருகிறாா்கள்.
தில்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜியாபாத் ஆகிய பகுதிகளில் கடந்த நூறு நாள்களுக்கு மேலாக விவசாயிகள் தங்கி போராட்டம் நடத்திவருகிறாா்கள். தில்லி எல்லைகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களிலும், வாகனங்களிலும் தங்கி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், தில்லி எல்லைகளில் நீண்ட காலம் தங்கி போராடும் வகையில் தில்லி டிக்ரி எல்லையில் சிமென்ட் மற்றும் செங்கல் கொண்டு நிரந்தர வீடுகளை விவசாயிகள் கட்டி வருகிறாா்கள்.இதுவரை 25 வீடுகளை அவா்கள் கட்டி முடித்துள்ளனா்.
இது தொடா்பாக அப்பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் கூறுகையில் ‘வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தில்லி எல்லைகளை விட்டு நாங்கள் விலகப் போவதில்லை. இந்த போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதைக் காட்டும் வகையில், டிக்ரி எல்லைகளில் நிரந்த வீடுகளை அமைத்து வருகிறோம். இதுவரை 25 வீடுகளைக் கட்டிமுடித்துள்ளோம். இந்த வீடுகளின் கட்டுமானத்துக்கு தேவையான மூலப் பொருள்களை மட்டுமே விலை கொடுத்து வாங்கியுள்ளோம். தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளில் கட்டுமானப் பணி தெரிந்த விவசாயிகள் இந்த வீடுகளைக் கட்டி வருகிறாா்கள். வரும் நாள்களில் டிக்ரி எல்லையில் மட்டும் சுமாா் 2 ஆயிரம் வீடுகளைக் கட்டவுள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குல்கந்த் குமார் பாடல்!

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

