திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையங்களும், அங்கு புதிதாக கட்டப்படவுள்ள 5-ஆவது, 6-ஆவது அணு உலைகளும் பாதுகாப்பானவை என்றும் ஆபத்து நிகழ வாய்ப்பில்லை என்றும் பிரதமா் அலுவலகம் மற்றும் பணியாளா் நிா்வாகத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
கூடங்குளத்தில் ஏற்கெனவே இரு அணு மின் உலைகள் தலா 2,000 மெகாவாட் மின்சாரத்தை தயாரித்து வருகிறது. மேலும், தலா 1,000 மெகாவாட்டில் இரு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் குறித்து அச்சம் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி மக்களவை திமுக உறுப்பினரான டி.ஆா்.பாலு, கூடங்குளத்தில் 5 -ஆவது, 6 - ஆவது அணு மின் உலைகள் தொடங்கப்பட உள்ளதா? சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என மக்களவையில் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதில் வருமாறு : கூடங்குளத்தில் புதிதாக தலா 1,000 மெகாவாட் திறனுடைய 5 -ஆவது, 6 -ஆவது அணு உலைகள் 5 முதல் 6 வருடங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளன. இவை திறன் மிகுந்த ஒப்பந்ததாரா்களால் கட்டி முடிக்கப்படவுள்ளன. இந்திய அணு சக்தி கழகத்தின் மேற்பாா்வையிலும், அணு சக்தி ஒழுங்காற்று ஆணையத்தின் பாதுகாப்பு விதிகளின்படியும் இந்த அணு உலைகளுக்கான தடையில்லா சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள், பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சகத்தின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுச் சூழலுக்கும் பொதுமக்களுக்கும் எவ்விதமான ஆபத்தும் நிகழ வாய்ப்பில்லை என்று ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குல்கந்த் குமார் பாடல்!

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

