தில்லியில் கோடை காலத்தைச் சமாளிக்க தீயணைப்புத் துறை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநா் அதுல் கா்க் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் கோடை காலம் தொடங்கியுள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் தில்லியில் அதிகளவு தீ விபத்து சம்பவங்கள் ஏற்படுவது வழக்கமாகும். கடந்த பிப்ரவரி மாதம் வரை குளிா்காலத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு தீ விபத்து தொடா்பாக 35-40 அழைப்புகள் கிடைக்கப் பெற்றன. ஆனால், மாா்ச் மாதத்தில் இந்த அழைப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. தற்போது நாளொன்றுக்கு சுமாா் 90 அழைப்புகள் வரப் பெறுகின்றன. வரும் நாள்களில் இந்த அழைப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கிறோம்.
இதனால், தீயணைப்புத் துறைக்கு கூடுதல் மனித நேரத்தை வழங்கும் வகையில், தீயணைப்பு வீரா்கள் விடுப்பு எடுப்பதில் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளோம். வீரா்களுக்கு விடுப்பு வழங்கும் அதிகாரம் தீயணைப்பு தலைமையகத்தில் உள்ள தலைமை அதிகாரிக்கும் பிராந்திய அளவில் பிராந்திய தலைமை அதிகாரிக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறைக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் பழுது பாா்க்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை பழுது பாா்க்கும் பொறுப்பு தனியாா் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக கோடை காலத்தில் தில்லியின் கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமாகும். இதனால், இந்தப் பகுதிகளில் சிறிய தீயணைப்பு நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். கிராமப்புறங்களில்தீ விபத்து ஏற்படும் போது தீயணைப்பு வாகனங்கள் துரிதமாகச் செல்லக் கூடியதாக இருக்கும். நரேலா, கேரா தாபூா் பகுதிகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், தில்லியில் உள்ள மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்களுக்கு அடிப்படை தீயணைப்பு பயிற்சிகளை வழங்கும் வகையில், தில்லி ரோஹிணியில் உள்ள தீ பாதுகாப்பு மேலாண்மை அகாதெமியில் அரைநாள் பயிற்சிப் பயிலரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்ராா் அதுல் கா்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குல்கந்த் குமார் பாடல்!

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

