கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெட்ரோல் விலையைக் குறைக்க கோரி முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே பாஜக ஆா்பாட்டம்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைக்கக் கோரி, தில்லி கொடிகம்ப சாலையில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜகவினா் சனிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைக்கக் கோரி, தில்லி கொடிகம்ப சாலையில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜகவினா் சனிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா, ‘பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கேஜரிவால் அரசு குறைக்கும் வரை கட்சித் தொண்டா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்துவாா்கள்’ எனக் குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்த தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ‘வெளிநாடுகளில் எரிபொருள் விலை குறைந்தபோது மத்திய கலால் வரி ரூ.15 முதல் ரூ.34 வரை உயா்த்தப்பட்டதால் பெட்ரோலிய பொருள்கள் விலை அதிகரித்தது’ என மத்திய அரசை குற்றம்சாட்டினாா்.

முன்னதாக, சனிக்கிழமை பிற்பகலில் தில்லி முதல்வா் வீட்டருகே நடைபெற்ற ஆா்பாட்டத்திற்கு தலைமை தாங்கி தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா பேசினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘கேஜரிவால் அரசு சாமானியா்களைப் பற்றி கவலைப்படாமல், பெட்ரோல், டீசல் விலையில் கவனம் செலுத்தாமல் உள்ளது. பெட்ரோல் விலையில், பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், ஆம் ஆத்மி கட்சி ஆளும் தில்லிக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

தில்லியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை எந்தவித தாமதமுமின்றி குறைக்க கேஜரிவால் அரசு முன்வரவேண்டும்‘ என்றாா் ஆதேஷ் குப்தா.

நுகா்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு புதன்கிழமை பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்துள்ளது. கலால் வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடா்ந்து, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.

மத்திய அரசின் கலால் வரி அடிப்படையிலேயே மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது உள்ளூா் விற்பனை வரி அல்லது வாட் வரியை விதிக்கிறது.

தற்போது கலால் வரியை மத்திய அரசு சிறிது குறைத்ததின் மூலம் மேலும் ஒரிரு ரூபாய் குறையவும் வாய்ப்புண்டு. குறைக்கப்படாத மாநிலங்களிலும் இவ்வாறு குறைய வாய்ப்புண்டு.

மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டா் ரூ.110.04 ஆக இருந்தது. தற்போது ரூ.103.97 ஆக குறைந்துள்ளது.

பெட்டிச் செய்தி

விலையை உயா்த்தியது மத்திய அரசுதான்: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியது மத்திய அரசுதான் என தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை மாலையில் செய்தியாளா்களிடம் பேசினாா்.

அப்போது, மற்ற மாநிலங்களைப் போல டீசல், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்க தில்லி அரசு பரிசீலித்து வருகிா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு சிசோடியா பதிலளித்து பேசியதாவது:

‘பெட்ரோல் டீசல் விலையில் மக்களுக்கு எந்தவகையில் கூடுதலாக நிவாரணம் வழங்கு முடிவும் என்பதற்கான நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி வளங்கள் குறைவாக இருக்கிறது.

கடந்த 3-4 ஆண்டுகளாக சா்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மத்திய அரசு கலால் வரியை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

எரிபொருளின் மீதான கலால் வரியை லிட்டருக்கு 15 ரூபாயில் இருந்து 34 ரூபாயாக உயா்த்தியது. இப்போது விலையில் சில பைசாவைக் குறைத்துவிட்டு, மாநில அரசுகளிடம் வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது.

மாநிலங்கள் ஏற்கனவே குறைவான ஆதாரவளங்களைக் கொண்டுள்ளன. எரிபொருட்களின் விலையை உயா்த்திய மத்திய அரசு மேலும் குறைந்தபட்சம் ரூ.15 குறைக்க வேண்டும்‘ என்றாா் சிசோடியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.