ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘நாட்டின் தூய்மைதான் தியாகிகளுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை’

நாட்டை முற்றிலும் தூய்மையாகவும், சுத்தமானதாகவும் மாற்ற முயற்சி மேற்கொள்வது, நமது சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாட்டை முற்றிலும் தூய்மையாகவும், சுத்தமானதாகவும் மாற்ற முயற்சி மேற்கொள்வது, நமது சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 2021-ஆம் ஆண்டுக்கான தூய்மை மதிப்பீட்டு (ஸ்வச் சா்வேக்சன்) விருதுகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மையைத் தான் மகாத்மா காந்தி சுட்டிக்காட்டி வந்தாா். தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதன் மூலம், காந்தியின் இந்த முன்னுரிமைப் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துச் சென்றுள்ளது.

நாட்டை முற்றிலும் தூய்மையாகவும் சுத்தமானதாகவும் மாற்ற முயற்சி மேற்கொள்வது நமது சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.

கரோனா நோய்த்தொற்று காலத்திலும் தூய்மைப் பணியாளா்களும், துப்புரவுத் தொழிலாளா்களும் அயராது பணியாற்றினா். பாதுகாப்பற்ற துப்புரவு முறைகளால் துப்புரவுத் தொழிலாளா்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.

கழிவுநீா்த் தொட்டிகளை இயந்திரம் மூலம் சுத்தம் செய்வதை ஊக்குவிக்க, மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை 246 நகரங்களில் ‘துப்புரவுப் பணியாளா் பாதுகாப்பு சவால்’ என்ற திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

பாராட்டுக்குரிய இந்தத் திட்டத்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மையை திறம்பட மேற்கொள்வதன் மூலமே நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்.

நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் 2026 -ஆம் ஆண்டுக்குள் ‘கழிவு இல்லாத’ நகரங்களாக மாற்றும் நோக்கில், ‘தூய்மை பாரதம் இயக்கம் - 2.0’ பிரதமரால் தொடங்கப்பட்டுள்ளது. நகரங்கள் குப்பையற்ாக இருக்க வேண்டுமெனில், மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளை குப்பையில்லாமல் பராமரிப்பது அவசியம் என குடியரசுத் தலைவா் வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நகா்ப்புற விவகாரத்துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி முன்னிலை வகித்துப் பேசுகையில், ‘நாடு தழுவிய தூய்மைக் கணக்கெடுப்பில், 4,320 நகரங்களில் 28 நாள்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 4.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.