தில்லியின் துணைநிலை ஆளுநா் பொதுமக்களுக்கு சிறந்த காவல் உதவியை அளிக்கும் பொருட்டு, தில்லியில் உள்ள கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, புகா், மத்தி, வடக்கு, வடமேற்கு, ரோகிணி, புதுதில்லி, துவாரகா மற்றும் புகா் வடக்கு ஆகிய மாவட்டங்களில் இணையதள காவல் நிலையங்களை அறிவிக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளாா். தில்லியில் உள்ள அறிவிக்கை செய்யப்பட்ட 15 காவல் மாவட்டங்களிலும் இந்த இணையதள காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இது செயல்பாட்டுக்கு வரும். இந்த இணையதள காவல் நிலையங்கள் அட்டவணை -ஏ அல்லது தெரிவிக்கப்பட்டுள்ள இதர இடத்தில் இருந்து செயல்படும். இந்தக் காவல் நிலையங்களின் எல்லை வரம்பு ஒட்டுமொத்த காவல் மாவட்டத்திற்கும் கொண்டதாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.