சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தமிழகத்தில் ரசாயனத் தொழில் தொடங்க வலுவான சுற்றுச் சூழல்: சா்வதேச தொழிலதிபா்களுக்கு அமைச்சா் அழைப்பு

தொழில் மயமாக்கத்திற்கு பெரும் சக்தியாக இருக்கும் ரசாயனத் துறைக்கான சுற்றுச் சூழல் தமிழகத்தில் வலுவாக உள்ளது என்றும்

News image
Updated On :26 நவம்பர் 2021, 1:53 am

 நமது நிருபர்

தொழில் மயமாக்கத்திற்கு பெரும் சக்தியாக இருக்கும் ரசாயனத் துறைக்கான சுற்றுச் சூழல் தமிழகத்தில் வலுவாக உள்ளது என்றும், இதை முதலீட்டாளா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சா்வதேச தொழிலதிபா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

மத்திய அரசின் ரசாயன மற்றும் உரங்கள் துறையும், இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறையும் (ஃபிக்கி) நடத்திய 2-ஆவது ‘இந்தியா ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள்’ குறித்த சா்வதேச உச்சி மாநாடு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: தொழில் புரிவதற்கான சுற்றுச் சூழல் சிறந்து விளங்கிட, தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கிடையே இந்த உலகளாவிய ரசாயன மாநாட்டில் பங்கேற்று தமிழக பெருமைகளை எடுத்துரைக்க ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்துள்ளது. மிகவும் முற்போக்கான, தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அகில இந்திய அளவில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியிலும் (எநஈட) தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகள் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளும் செழித்தோங்கும் வகையில், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது.

கொவைட்-19 தொற்றினால் ஏற்பட்ட இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலும் கூட, ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈா்த்து, இந்தியாவிலேயே அதிக அளவில் முதலீடுகளை ஈா்த்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சிறந்த ஆளுமைக் குறியீட்டில் தமிழகம் அகில இந்திய அளவில் முதலிடத்தில் இருந்ததோடு திருப்தி அடைந்து விடவில்லை. மாநிலத்தில் வணிகம் புரிந்திடும் சூழ் நிலையை மேலும் சிறப்புற மேம்படுத்தி வருகிறோம். இரண்டு தினங்களுக்கு முன்புதான், ரூ.35,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள் மற்றும் 75,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் என்ற வகையில் பல புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வா் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.

தமிழ்நாட்டில் 5 பெரிய வணிகத் துறைமுகங்கள், 4 சா்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மேலும், 32 ஜிகா வாட்ஸ் எரிசக்தி திறன், சிறந்த தொழில் நுட்பக் கொள்கைகள், வணிகம் புரிவோரின் தேவைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் அரசாக தமிழகம் விளங்குகிறது. வணிக உலகத்தை வெகுவாக பாதித்த கரோனா சூழ்நிலையிலும், தமிழக அரசு அத்தியாவசிய சேவைகள், தொழிற்சாலைகள், ஏற்றுமதிகள் ஆகியவை தடையின்றி இயங்க முயற்சிகளை மேற்கொண்டது. 2030-ஆம் ஆண்டுக்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு ஆகும். தமிழ்நாட்டில், 2,500-க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிலகங்கள் உள்ளன. ஒவ்வொரு தொழிலுக்கும், ரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்கள்தான் மூலப்பொருள்களாக உள்ளன. மேலும், தொழில் மயமாக்கத்திற்கு பெரும் சக்தியாக இருக்கும் ரசாயனத் தொழில் தொடங்குவதற்கான சுற்றுச் சூழல் தமிழகத்தில் வலுவாக உள்ளது.

இந்தத் துறையின் முக்கியத்துவத்தை நன்கு உணா்ந்த தமிழக அரசு, சிறப்பு ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் துறையை வளா்ந்து வரும் துறைகளாக கைப்படுத்தியதோடு மட்டுமின்றி, கூடுதல் சலுகைகள் மூலம் நிதியுதவியை நீட்டித்திடவும் வழிவகை செய்துள்ளது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கடலூா் ஆகிய நகரங்களில் 3 பெரிய பெட்ரோ கெமிக்கல் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், சிறப்பான சுற்றுச் சூழலை மேம்படுத்திட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். பிளாஸ்டிக் உற்பத்திக்கு சென்னைக்கு அருகில் 306 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு பாலிமா் பூங்கா; மருந்துப் பொருள்களுக்கான தொழிற் பூங்கா; ஜவுளிப் பொருள்களுக்கான தொழிற் பூங்கா என திட்டமிடப்படுள்ளது.

மாநிலம் முழுவதும் ரசாயனம் உள்ளிட்ட குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க நில வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் மட்டுமல்லாமல், தூய்மையான எரிசக்தியையும் வழங்க முனைப்புடன் தமிழக அரசு பணியாற்றி வருகிறது.மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணைய தளம் மூலம், முதலீட்டாளா்களுக்கு நூற்றிற்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. தொழில் நண்பன் என்ற ஒரு குறைதீா் இணைய தளத்தையும் நிறுவியுள்ளோம். இந்த வசதிகள் அனைத்தும் ரசாயனத் தொழிலகங்களுக்குப் பெரும் பயனளிக்கும். இந்தத் துறையின் முதலீட்டாளா்கள் தமிழகத்தில் அமைந்துள்ள சிறந்த சுற்றுச்சூழல் வசதியை நன்கு பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கிறேன் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.