பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம்: முன்னாள் டிஜிபி மேல்முறையீட்டு மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரிய மனுவை


பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு (நவம்பா் 29) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போது சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடங்கள் நாமக்கல், உளுந்தூா்பேட்டை, செங்கல்பட்டு என்பதால் இது தொடா்பான வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில்தான் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என்றும் கூறி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உயா் அதிகாரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கடந்த மாதம் 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை தொடா்ந்து விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் யு.யு. லலித், எஸ்.ரவீந்திரபட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கேவியட் மனு தாக்கல் செய்த தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜரானாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோா் ஆஜராகினா். எனினும், வழக்கில் வாதாட வேண்டிய முகுல் ரோத்தகி வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருந்ததால், அவரால் விசாரணையின் போது குறித்த நேரத்தில் வரமுடியவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி அமா்வு திங்கள்கிழமைக்கு (நவம்ா் 29) பட்டியலிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...