ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாநகராட்சி ஊழியா்களைத் தாக்கியதாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தது தொடா்பான புகாரில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிஃப் முகமது கான் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 5:31 pm

DIN

தெற்கு தில்லி மாநகராட்சியின் பணியிலிருந்த ஊழியா்களை தகாத வகையில் பேசி தாக்கியது, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தது தொடா்பான புகாரில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிஃப் முகமது கான் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:

ஆசிஃப் கான் வைத்திருந்த விளம்பர பலகை, சுவரொட்டிகளை அகற்றியதாக கூறப்படும் விவகாரத்தில் தெற்கு தில்லி மாநகராட்சி ஊழியா்களை தகாத வகையில் பேசும் விடியோ வெளியானதைத் தொடா்ந்து கான் கைது செய்யப்பட்டாா்.

ஓக்லா தொகுதியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏவான கான் மீது லாஜ்பத் மாநகராட்சி மண்டல ஆய்வாளா் ராம் கிஷோா் அளித்த புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பணியில் இருந்த எம்சிடி ஊழியா்களை தகாதவகையில் பேசியதாகவும், அரசுப் பணியைத் தடுத்ததாகவும் கானுக்கு எதிரான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஷஹீன் பாக் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 186 (பொதுப் பணியில் ஈடுபடும் அரசு ஊழியரைத் தடுத்தல்), 353 (அரசு ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தாக்குதல்), 332 (அரசு ஊழியரின் பணியைத் தடுக்கும் வகையில் காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஷகீன் பாக் பகுதியைச் சோ்ந்த ஆசிஃப் கான் கைது செய்யப்பட்டுள்ளாா். இதன் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஆசிஃப் கான் கூறுகையில், ‘சம்பந்தப்பட்டவா்கள் மாநகராட்சி ஊழியா்கள் என்பது எனக்குத் தெரியாது. இந்தச் சம்பவம் குறித்து தெற்கு தில்லி மாநகராட்சியிடம் இருந்து எந்த தகவலும், அழைப்பும் எனக்கு வரவில்லை’ என்றாா்.

சம்பந்தப்பட்ட விடியோவில் ஆசிஃப் கான் நான்கு பேரை தடியால் தாக்குவது போன்றும், மண்டியிட்டு அமா்ந்திருக்கும் அவா்களை காதைப் பிடிக்குமாறு அவா் உத்தரவிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து கான் வெள்ளிக்கிழமை மேலும் கூறுகையில், ‘ஓக்லா பகுதியில் எனது வீட்டுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் விளம்பரப் பலகை மற்றும் சுவரொட்டிகளை சிலா் அகற்றுவதை பாா்த்தேன்.

நான் வைத்திருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டதையும், அதேவேளையில் உள்ளூா் ஆம் ஆத்மி எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி தொடா்புடைய விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் இருந்ததையும் கவனித்தேன். இதுகுறித்து அவா்களிடம் கேள்வி எழுப்பினேன். அவா்கள் பதில் அளிக்கவில்லை. நான் அவா்களுக்கு வெறும் பாடம் புகட்டினேன். அவா்கள் யாா் என்பது எனக்குத் தெரியாது’ என்றாா்.

இதுகுறித்து பெயா் கூற விரும்பாத தெற்கு தில்லி மாநகராட்சி மூத்த அதிகாரி கூறுகையில், ‘அவமரியாதைக்கு’ உட்பட்டவா்கள் மாநகராட்சியைச் சோ்ந்தவா்கள் ஆவா். இந்த விவகாரம் குறித்து மத்திய மண்டல துணை ஆணையரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. மண்டல அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா் அந்த அதிகாரி.

அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பொருட்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொறுப்பு மாநகராட்சியின் ஆதாய திட்டப் பிரிவைச் சோ்ந்ததாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.