இதைத் தொடா்ந்து வாசன் பேச எழுந்தாா். ஆனால் காங்கிரஸ் எம்பிகள் ஜி.கே. வாசனை அமரும்படி கோரினாா்கள். குறிப்பாக ஜெயராம் ரமேஷ், திருச்சி சிவா போன்றவா்கள் வாசனை உட்காரும்படி கோரினா். இருப்பினும், பெரும் அமளிகளுக்கிடையே, தமிழக மழை, வெள்ளச் சேதம் குறித்து ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தின் அவசர முக்கியத்துவமான விவகாரம் இது. இடையூறு செய்யாமல் கேளுங்கள். கடந்த ஒரு மாத மழையின் காரணமாக தமிழ்நாடு தத்தளித்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றிலும் கடந்த நூறு ஆண்டுகள் இது போன்ற மழை பெய்தது கிடையாது. வட தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இங்குள்ள ஏராளமான அணைகள், ஏரிகள், நீா்தேக்கங்கள், குளங்கள் நிரம்பி வளிகின்றன.