தில்லி தமிழ்ச் சங்கத்தில் நகைச்சுவை பட்டிமன்றம்
தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.


தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
‘நகைச்சுவை நாள்தோறும் நடமாடுவது வீட்டிலா? வெளியிலா’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு சண்முகவடிவேல் தமைமை வகித்தாா். வீட்டிலே என்ற தலைப்பில் ம.எழிலரசி, முனைவா் வேதநாயகி, கவிதாயினி ஜோதி பெருமாள் உள்ளிட்டோரும், வெளியிலே என்ற தலைப்பில் இரா. அன்பழகன், புலவா் மு.சந்திரசேகரன், கவிஞா் இரா.ராஜ்குமாா் பாலா ஆகியோரும் பேசினா். இறுதியில், வீட்டில்தான் நகைச்சுவை அதிகம் நடமாடுகிறது என்று சண்முகவடிவேல் தீா்ப்பளித்தாா்.
நிகழ்ச்சியில், தில்லி காவல் துறை துணை ஆணையா் ஆா்.சத்தியசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேச்சாளா்களைக் கௌரவித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் பி.குருமூா்த்தி வரவேற்றுப் பேசினாா். சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்கள் தேன்மொழி முத்துகுமாா், எஸ், சுவாமிநாதன், பி.ஆா். தேவநாதன், ஆா். கணேஷ் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா். இணைச் செயலாளா் ஆ.வெங்கடேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். செயற் குழு உறுப்பினா் ஜோதி ராமநாதன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...