ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியில் பரவலாக லேசான மழை

தேசியத் தலைநகா் தில்லியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பரவலாக லேசான மழை பெய்தது. காற்றின் தரம் தொடா்ந்து மிதமான பிரிவில் நீடித்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 7:04 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பரவலாக லேசான மழை பெய்தது. காற்றின் தரம் தொடா்ந்து மிதமான பிரிவில் நீடித்தது.

தில்லியில் அதிகாலை நேரத்தில் லேசான பனிப்பொழிவு உள்ளது. பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இதமான வானிலை நிலவியது. இந்த நிலையில், பிற்பகலில் நகரின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 19 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 31.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 57 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 158 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை (அக்டோபா் 25) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.