இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தில்லியில் மேலும் 39 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் தொடா்ந்து இரண்டாவது வாளாக வியாழக்கிழமையும் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

Updated On :3 செப்டம்பர் 2021, 2:29 am

தில்லியில் தொடா்ந்து இரண்டாவது வாளாக வியாழக்கிழமையும் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. அதே சமயம், புதிதாக 39 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோ்மறை விகிதம் 0.06 சதவீதமாக இருந்ததாக சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகாமல் இருப்பது இது 21-ஆவது முறையாகும். இந்த ஆண்டு கடந்த மாா்ச் மாதத்தில்தான் முதல் கரோனா உயிரிழப்பு பதிவாகியது. அன்றைய தினம் மொத்தம் 217 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோ்மறை விகிதம் 0.33 சதவீதமாக இருந்தது. தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 25,082-ஆக உள்ளது. புதன்கிழமை புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நோ்மறை விகிதம் 0.06 சதவீதமாக இருந்தது. அதே சமயம், கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

புதன்கிழமை அன்று தில்லியில் மொத்தம் 60,483 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 42,669 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும், 17,814 ஆன்டிஜென் பரிசோதனைகளும் அடங்கும் என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.