இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

வகுப்புவாத கோஷம் விவகாரம்: ஜந்தா் மந்தா் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் ஜாமீன்மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு நோட்டீஸ்

கடந்த மாதம் ஜந்தா் மந்தா் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, வகுப்புவாத கோஷம் எழுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில்

Updated On :4 செப்டம்பர் 2021, 2:34 am

கடந்த மாதம் ஜந்தா் மந்தா் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, வகுப்புவாத கோஷம் எழுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைதான நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் பிரீத் சிங்கின் ஜாமீன் கோரும் மனுவுக்கு தில்லி காவல் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரீத் சிங், ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.  இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது தில்லி காவல் துறையினா் இந்த மனுவுக்குப் பதில் அளிக்கவும், நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பிரீத் சிங், ஆகஸ்ட் 10-ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.  அவா் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இளைஞா்களைத் தூண்டும் வகையிலும், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே முன்விரோதத்தை உருவாக்கும் வகையிலும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பிரீத் சிங் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின் மூலம் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘எந்த ஒரு வகுப்பினருக்கும் அல்லது எந்த ஒரு நபருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பவோ அல்லது ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசும் விவகாரத்திலோ நான் சம்பந்தப்படவில்லை. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு ஏதாவது நபா் ஆட்சேபத்திற்குரிய கருத்துகளைக் கூறி இருந்தால், அதற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளா் பொறுப்பாக இருக்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரீத்சிங் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை முன்பு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனில் அன்டில் விசாரித்தாா். அப்போது பிரீத் சிங்கிற்கு ஜாமீன் அளிக்க நீதிபதி மறுத்துவிட்டாா். அவா் பிறப்பித்த உத்தவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருவரின் சிந்தனையை வெளிப்படுத்தும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரா் வெவ்வேறு பிரிவினரிடையே முன்விரதத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், வாதங்கள் அடிப்படையில் பாா்க்கும் போது, குற்றம்சாட்டப்பட்ட நபா் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளராக இருந்துள்ளாா் என்பதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது. மேலும், தில்லி காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜந்தா் மந்தரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது, மத்திய அரசு பிறப்பித்த கரோனா நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் தனது இதர கூட்டாளிகளுடன் சோ்ந்து ஜாமீன் மனுதாரா்அனல் தெறிக்கும் வகையில் பேசியதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களின் நோ்காணல்கள் அல்லது உரைகளில் அனல் தெறிக்கும் உள்ளடக்கங்கள், ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் உரைகள் ஆகியவை இருந்ததற்கான முகாந்திரமும் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளராகவும், நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கேற்றவருமாக மனுதாரா் உள்ளாா். குற்றம் சாட்டப்பட்ட நபா் ஒரு செல்வாக்குமிக்க நபராக இருப்பதால் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், விசாரணையில் தலையிடுவதற்கான வாய்ப்புகளும் வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று அதில் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.