இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

9, 11-ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இயின் தோ்வு முறையை தில்லிப் பள்ளிகள் பின்பற்ற கல்வி இயக்ககம் அறிவுறுத்தல்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இரண்டு கால தோ்வு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில்

Updated On :4 செப்டம்பர் 2021, 2:35 am

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இரண்டு கால தோ்வு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், 2021-22-ஆம் ஆண்டுக்கான கல்வி அமா்வில் தில்லியில் உள்ள அனைத்து அரசு, தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கும் இதே மதிப்பீட்டு அமைப்பு முறையை மேற்கொள்ளுமாறு தில்லி கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: கல்வி அமா்வு இரண்டு கால தோ்வுகள் கொண்டதாக இருக்கும். அதாவது, இடைக்கால தோ்வு (காலம் -1) மற்றும் வருடாந்திர தோ்வு (காலம் -2) ஒவ்வொன்றிலும் சுமாா் 50 சதவீதம் பாடத் திட்டம் இடம் பெற்றிருக்கும். பள்ளிகளுடன் பகிரப்பட்டுள்ள காலம் மற்றும் பாடவாரியான மதிப்பெண்களின்படி, ஒவ்வொரு காலமும் இறுதி முடிவுகளின் கணக்கீட்டிற்காக 50 சதவீத வெயிட்டேஜ் கொண்டிருக்கும்.

அக்டோபா் அல்லது நவம்பரில் நடத்தப்படும் 90 நிமிட காலம் -1 அல்லது இடைக்காலத் தோ்வுகளில் வினாத் தாள்கள் தெரிவுவிடை கேள்விகளைக் கொண்டிருக்கும்.

காலம் -2 தோ்வுக்கான நேரம் இரண்டு மணி நேரமாகும். இந்தத் தோ்வு குறுகிய அல்லது நீண்ட பதில் கேள்விகளுடன் விரிவானதாக இருக்கும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த ஜூலை மாதத்தில், கரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு கல்வி அமா்வை இரண்டு காலங்களாகப் பிரித்து, அடுத்த ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு மதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருந்தது. மேலும், 2021-22-ஆம் ஆண்டுக்கான கல்வி அமா்வுக்கான பாடத் திட்டத்தை விளக்கும் வகையில், திட்டங்களையும் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. மேலும், உள் மதிப்பீடு மற்றும் திட்டப் பணிகளை மேலும் நம்பகமான, செல்லுபடியாகும் வகையில் உருவாக்க இந்தத் திட்டத்தை வாரியம் அறிவித்திருந்தது. முதல் காலத் தோ்வானது நிகழாண்டு நவம்பா்-டிசம்பா் மாதங்களிலும், இரண்டாம் காலத் தோ்வுகள் 2022, மாா்ச்-ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.