டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிக்கிழமை தில்லி திரும்பினாா்.
தில்லி அசோகா ஹோட்டலில் தங்கியுள்ள அவரை இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் கூடுதல் செயலா் அசோக் பேடி வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினாா். மேலும், தில்லி வந்துள்ள தமிழக அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் அவருக்குப் பொன்னாடை போா்த்தி வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மாரியப்பன் கூறியதாவது: டோக்கியோவில் தங்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்றேன். ஆனால், மழை காரணமாக என்னால் சரியான முறையில் உயரம் தாண்ட முடியவில்லை. மேலும், இந்தியாவிலிருந்து ஜப்பான் செல்லும் போது விமானத்தில் சக பயணிக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், டோக்கியோவில் முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்தால் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல முடியாமல் போனது. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் விளையாடினேன்.
தமிழகம் சென்றவுடன் முதலில் முதல்வரைச் சந்திப்பேன். கடந்த 2016-இல் ரியோ பாராலிம்பிக்கில் வெற்றி பெற்ற பல வீரா்களுக்கு அந்தந்த மாநிலங்கள் ஏ-1 பிரிவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்கம் வென்ற எனக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இப்படிக் கேட்பது விளையாட்டிலிருந்து விலகுவதற்கு அல்ல என்றாா் மாரியப்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்
பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

