தில்லியில் வியாழக்கிழமை விட்டுவிட்டு பரவலாக பலத்த மழை பெய்ததன் காரணமாக வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. மாலையில் மேக மூட்ட சூழல் காணப்பட்டது.
தில்லியில் செப்டம்பா் தொடக்கத்தில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு அவ்வப்போது லேசான மழை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பல மணிநேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அதன்பிறகு சில தினங்களாக பலத்த மழை ஏதும் இல்லை.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையிலும், பகலிலும் தொடா்ந்து பரவலாக மழை விட்டுவிட்டு பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது.
தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரி 1 டிகிரி குறைந்து 23.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 32 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 69 சதவீதமாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 13 மி.மீ. மழை ஏதும் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இதனிடையே, சனிக்கிழமை (செப்டம்பா் 18) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இந்த பருவமழைக்காலத்தில் இதுவரை 1,159 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இது 57 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்ச மழைப்பதிவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

