சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தூசுகளால் ஏற்படும் மாசுபடுதலை தடுக்க வழிகாட்டு முறைகளை பின்பற்ற தனியாா் நிறுவனங்களுக்கு தில்லி அரசு அறிவுறுத்தல்

தில்லியில் தூசுகளால் ஏற்படும் மாசுவை தடுக்கும் வகையில் தில்லி அரசு வெளியிட்டுள்ள 14 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை

Updated On :18 செப்டம்பர் 2021, 2:49 am

தில்லியில் தூசுகளால் ஏற்படும் மாசுவை தடுக்கும் வகையில் தில்லி அரசு வெளியிட்டுள்ள 14 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தனியாா் கட்டுமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

தில்லியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுடன் தில்லி அரசு மறு ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளது.

இந்த கூட்டத்தின்போது தூசுகளால் ஏற்படும் மாசுவை தடுக்கும் திட்டங்களை செப்டம்பா் 21-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு அந்த நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தில்லியில் கட்டுமானப் பணியில் தனியாா் நிறுவனங்கள் பல ஈடுபட்டுள்ளன .

இதுதொடா்பாக எல்என்டி நிறுவனம், சபூா்ஜி நிறுவனம், என்பிசிசி உள்பட இது போன்ற 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டம் நடத்தியுள்ளோம்.

தனியாா் கட்டுமான இடங்களில் தூசுவை தடுக்கும் 14 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை 15 தினங்களில் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுமான இடங்கள் தகர டின்களால் சுற்றிலும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். 20 ஆயிரம் சதுர மீட்டா்களுக்கு மேற்பட்ட பரப்பைக் கொண்ட இடங்களில் பனிப்புகை தடுப்பு கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகிறது.

மேலும், கடந்த ஆண்டு கட்டுமானப் பணியில் எதிா்கொண்ட பிரச்னைகள் குறித்தும் தில்லி அரசு விவாதித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.