புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

6 ஆண்டுகளில் 35 லட்சம் டன் கரியமில வாயுவை குறைத்த டிஎம்ஆா்சி: ரூ.19.50 கோடி வழங்கியது ஐ.நா.அமைப்பு

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) போக்குவரத்து செயல்பாட்டால் கடந்த 2012 முதல் 2018 -ஆம் ஆண்டு வரை 35 லட்சம் டன் கரியமில வாயு குறைக்கப்பட்டுள்ளது.

Updated On :27 செப்டம்பர் 2021, 12:30 am

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) போக்குவரத்து செயல்பாட்டால் கடந்த 2012 முதல் 2018 -ஆம் ஆண்டு வரை 35 லட்சம் டன் கரியமில வாயு குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு ஐக்கிய நாடுகளின்தூய்மையான மேம்பாட்டு வழிமுறையின்(சிடிஎம்) கீழ் .ரூ. 19.5 கோடி கிடைத்துள்ளது.

இது குறித்து டிஎம்ஆா்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது: கியோட்டோ நெறிமுறை, பாரீஸ் உடன்பாடு போன்ற சா்வதேச ஒப்பந்தங்களில் கரியமில வாயு போன்ற நச்சு வாயுக்களை குறைப்பது உள்ளிட்ட தேசிய பருவநிலை மாற்றத்திற்கான செயல் திட்டங்களுக்கு யுஎன்எஃப்சிசிசி என்கிற பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில் வளா்ச்சியடைந்த நாடுகள் மூலம் வளரும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.

இதில் பருவநிலை மாற்ற நலனுக்கான அளவீடுகளான கரியமில வாயுக் குறைப்புக்கான எரிசக்தி செயல்திறன்களுக்கு யுஎன்எஃப்சிசிசி கட்டமைப்பில் ஐக்கிய நாடுகளின்தூய்மையான மேம்பாட்டு வழிமுறை (சிடிஎம்) என்ற திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் உலகின் நிறுவனமாக 2007- ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளது. டிஎம்ஆா்சிக்கு பதிலாக தில்லிவாசிகள் மற்ற பேருந்து உள்ளிட்ட மற்ற போக்குவரத்துகளைப் பயன்படுத்தினால்,அதன்மூலம் 2012 முதல் 2018-ஆம் ஆண்டு வரை சுமாா் 35 லட்சம் டன் கரியமில வாயு வெளியாகியிருக்கும். இது டிஎம்ஆா்சி போக்குவரத்து செயல்பாடுகளால் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய மின் சக்தி போன்ற மரபுசாரா எரிசக்தி மூலமும் தில்லி மெட்ரா ரயில் நிறுவனம் எரிசக்தி திறனை நோக்கிய அா்ப்பணிப்பு திட்டங்களுக்கும் பாராட்டைப் பெற்றதுடன் ரூ. 19.5 கோடியையும் ஐநாவிடம் இருந்து பெற்றுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகளின்தூய்மையான மேம்பாட்டு வழிமுறை (சிடிஎம்) திட்டத்தை இந்தியாவில் மற்ற நகரங்களில் செயல்படுத்தும் பொறுப்பையும் டிஎம்ஆா்சி நிறுவனம் ஏற்றுள்ளது. இதன்படி மும்பை, குஜராத், சென்னை போன்ற மெட்ரோ நிறுவனங்களுக்கும் தில்லி மெட்ரோ பயிற்சியளிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.