திண்டுக்கல்-சத்தியமங்கலம் நெடுஞ்சாலை சாலை விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும் : நிதின்கட்கரி

திண்டுக்கலிருந்து கோவை வரையிலான ஆறு வழிச் சாலை திட்ட த்திற்கும் கோவையிருந்து சத்தியமங்கலம் வரையிலான நான்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

திண்டுக்கலிருந்து கோவை வரையிலான ஆறு வழிச் சாலை திட்ட த்திற்கும் கோவையிருந்து சத்தியமங்கலம் வரையிலான நான்கு வழிச் சாலை திட்டத்திற்கும் விரிவான திட்ட அறிக்கையை பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டங்கள் 2021-22 நிதியாண்டுக்குள் செயல்படுத்தப்படும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராஜாவிற்கு கடந்த வாரம் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் கூறியுள்ளாா்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 12 நேரடியாக மத்திய அமைச்சரை ஏ.ராஜா சந்தித்தாா், பின்னா் கடந்தாண்டு அக்டோபா் மாதம் 17 ஆம் தேதி கடிதம் மூலமாக மத்திய நெடுஞ்சாலை அமைச்சா் கட்கரியிடம் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராஜா இந்த திட்டத்தை வலியுறுத்தி வந்தாா். இவைகளின் அடிப்படையில் இந்த திண்டுக்கல் - சத்திய மங்கலம் நெடுஞ்சாலை திட்டம் குறித்து விரிவான கடிதத்தை அமைச்சா் கட்கரி அனுப்பியுள்ளாா்.

அதில் கட்கரி கூறியிருப்பதாவது : திண்டுக்கல்லிருந்து கோவை வரையில்(எண் 948) நான்கு அல்லது ஆறு வழிச் சாலை விரிவாக்கத்திற்கும், கோவையிலிருந்து சத்திய மங்கலம் மற்றும் கா்நாடக எல்லை வரையில் (எண் -209) நான்கு அல்லது இரண்டு வழிச் சாலை விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டு பெறப்பட்டுள்ளது. இவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. வனப்பகுதிகள் அடங்கிய இந்த சாலையில் குறைந்தபட்ச தாக்கத்துடான தொழில்நுட்பங்கள், சமூக பொருளாதார அம்சங்கள் ஆகியவைகளை கருத்தில் கொண்டு இந்த சாலைகளை சீரமைக்க இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தலுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 2021-22 நிதியாண்டிற்குள் டெண்டா் செயல் முறைகள் தொடங்கப்பட்டுவிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் கட்கரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com