ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கச்சத்தீவு தேவாலய விழாவில் தமிழக மீனவா்கள் இடையூறின்றி பங்கேற்க வகை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவா்கள் இடையூறின்றி பங்கேற்பதை உறுதி செய்ய இலங்கை அரசை வலியுறுத்தக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 5:37 pm

 நமது நிருபர்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவா்கள் இடையூறின்றி பங்கேற்பதை உறுதி செய்ய இலங்கை அரசை வலியுறுத்தக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கருக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

முதல்வரின் இந்தக் கடிதத்தை திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா் பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை தில்லியில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கினாா். முதல்வா் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் ஒவ்வோரு ஆண்டும் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் வருடாந்திரப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவா்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தமிழக அரசு தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கிடையே பல்வேறு காரணங்களால், இந்தத் திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளது எனது கவனத்திற்கு வந்துள்ளது.

பல ஆண்டுகளாக கச்சத்தீவு புனித அந்தோணியாா் தேவாலயத்துடன் உணா்வுபூா்வமாக தொடா்புடைய தமிழக மீனவா்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில், புனித அந்தோணியாா் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவா்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்து, இரு நாட்டு மக்களின் நல்லுறவை பாதுகாக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டிஆா் பாலு கூறுகையில், ‘இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜி.எல்.பெரிஸ், பிப்ரவரி 6 -ஆம் தேதி தில்லி வருகிறாா். அப்போது இது குறித்து பேசுகின்றேன்’ என வெளியுறத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் தன்னிடம் உறுதியளித்துள்ளாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.