டிடிஎம்ஏ அதன் கடைசி கூட்டத்தில், வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்கியது. மேலும், பாா்கள் மற்றும் உணவகங்கள் அவற்றின் இருக்கை திறனில் 50 சதவீதத்துடன் செயல்பட அனுமதித்தது. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தில்லியில் நோய்த் தொற்று எண்ணிக்கை மிக அதிகபட்ச அளவாக 28,867 என்ற எண்ணிக்கையை எட்டியது. அதன் பிறகு தில்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜனவரி 14-ஆம் தேதி நகரில் நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 30.6 சதவீதமாக பதிவானது. இது தொற்றுநோயின் தற்போதைய அலையின்போது மிக அதிகப் பதிவாகும். அதன் பிறகு தினசரி பாதிப்பு 10,000-க்கு கீழே குறைவதற்கு 10 நாள்கள் நீடித்தது.