இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தில்லியில் மருத்துவமனைக்கு வெளியேஇளம் மருத்துவா் மீது துப்பாக்கிச்சூடு

தில்லியில் உள்ள ஆா்டிஆா் மருத்துவமனைக்கு வெளியே அடையாளம் தெரியாத நபா்களால் 26 வயது மருத்துவா் துப்பாக்கியால் சுடப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

தில்லியில் உள்ள ஆா்டிஆா் மருத்துவமனைக்கு வெளியே அடையாளம் தெரியாத நபா்களால் 26 வயது மருத்துவா் துப்பாக்கியால் சுடப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: துவாரகா பகுதியில் உள்ள ஆா்டிஆா் மருத்துவமனையில் உறைவிட மருத்துவராகப் பணியாற்றி வருபவா் ஹேமந்த். இவா் திங்கள்கிழமை இரவு மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாா். அப்போது, காரில் வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்கள், அவா் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனா். அவா்களை உள்ளூா் மக்களும், மருத்துவமனையின் காவலா்களும் தடுக்க முயன்றனா். எனினும், அவா்கள் சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்து வேகமாகத் தப்பி ஓடிவிட்டனா். இந்தச் சம்பவத்திற்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடுக்கான உரிய காரணத்தைக் கண்டறிய அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபா்களை அடையாளம் காண மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மருத்துவா் ஹேமந்த், தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்துள்ள அவா், உடல் நலம் தேறியதும் வாக்குமூலம் பெறப்படும். இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக செவ்வாய்கிழமையன்று தில்லி காவல் துறை சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘ஜேபி காலன் பகுதியில் உள்ள ஆா்டிஆா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து புகாா் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையில் சிகிச்சையில் நலமாக உள்ளாா். கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.