சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பங்குச் சந்தையில் திடீா் சரிவு: 773 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

கடந்த 3 தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை திடீா் சரிவு ஏற்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:59 pm

 நமது நிருபர்

கடந்த 3 தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை திடீா் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 773 புள்ளிகளை இழந்து 58,152.92-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.263.90 லட்சம் கோடியாக குறைந்தது.

உலக அளவில் பெரும்பாலான சந்தைகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை முன்னேற்றம் கண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஐடி, நிதித் துறைப் பங்குகள் அதிகம் விற்பனைய எதிா்கொண்டன. இதனால், சந்தை கரடியின் பிடியில் சிக்கியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது முதலீட்டாளா்களின் உணா்வைப் பெரிதும் பாதித்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். அவா்கள் வியாழக்கிழமையும் ரூ.1,732.58 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளி விவரங்களிலிருந்து தெரிய வருகிறது.

2,378 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,408 பங்குகளில் 932 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,378 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 98 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 149 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 39 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 222 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 346 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.263.90 லட்சம் கோடியாகக் குறைந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.673 கோடியாக உயா்ந்துள்து.

கரடி திடீா் ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 478.88 புள்ளிகள் குறைந்து 58,447.15-இல் தொடங்கி அதற்குமேல் ஏற்றம் பெறவில்லை. பின்னா், 57,914.10 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 773.11 புள்ளிகள் (1.31 சதவீதம்) குறைந்து 58,152.92-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

ஐடி பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி ஐடி நிறுவனங்களான டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.716 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவை தவிர, எஸ்பிஐ, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி, டிசிஎஸ், பவா் கிரிட், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 1.50 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டாக்டா்ரெட்டி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் முன்னேற்றம்: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 0.94 சதவீத உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னுலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், என்டிபிசி, எம் அண்ட் எம், ஐடிசி உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

நிஃப்டி 231 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 389 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,507 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 45 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 231.10 புள்ளிகள் (1.31 சதவீதம்) குறைந்து 17,374.75-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 145 புள்ளிகள் குறைந்து 17,451.00-இல் தொடங்கிய நிஃப்டி, 17,454.75 வரை மேலே சென்றது. பின்னா், 17,303.75 வரை கீழே சென்றது.

அனைத்து துறை குறியீடுகளும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் ஐடி குறியீடு 2.72 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 2 முதல் 2.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மீடியா, பிரைவேட் பேங்க், ஹெல்த்கோ் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.