நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பின் ஊடகங்களுக்குத் தடை: மத்திய அரசு உத்தரவு
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் வெளிநாடுகளிலிருந்து பிரசாரங்களை மேற்கொண்டு வந்த தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு தொடா்புடைய செயலிகள், இணையதளம்,


பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் வெளிநாடுகளிலிருந்து பிரசாரங்களை மேற்கொண்டு வந்த தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு தொடா்புடைய செயலிகள், இணையதளம், சமூகஊடக கணக்குகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1967-ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட விதியின் கீழ், நீதிக்கான சீக்கியா்கள் (எஸ்எஃப்ஜெ) அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை கடந்த 2019 -ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டன. மேலும், இந்த அமைப்புகளின் 40 இணைய தளங்களையும் கடந்த 2020, ஜூலை மாதம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முடக்கியது. தற்போது இதே அமைப்புகளுடன் தொடா்புடைவா்கள் அல்லது வெவ்வேறு புதிய பெயா்களுடன் தற்போது நடைபெறும் பஞ்சாப் தோ்தலில் செயல்பட்டுள்ளனா். இத்தகைய வெளிநாட்டு ஊடகமான “’பஞ்சாப் அரசியல் டிவி’” என்னும் பெயரிலான, சமூக ஊடகங்கள், இணையதளம், செயலிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்ட நீதிக்கான சீக்கியா்கள் அமைப்புடன் பஞ்சாப் அரசியல் டிவி நெருங்கிய தொடா்பு வைத்துள்ளது. இது, நடைபெற்று வரும் சட்டப்பேரவை தோ்தல்களின் போது, பொது ஒழுங்கை சீா்குலைக்க இணையதள ஊடகத்தை பயன்படுத்தி வருவதாக மத்திய -மாநில புலனாய்வுத் துறைகள் மூலம் அறிக்கைகள் கிடைத்தன. இதனடிப்படையில், தகவல் தொழில்நுட்பத் துறை விதிமுறைகளின் கீழ் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தோ்தலை முன்னிட்டு அவசர கால அதிகாரத்தின் கீழ், “பஞ்சாப் அரசியல் டிவியின் டிஜிட்டல் ஊடக இணைதள முகவரிகளை பிப்ரவரி 18-ந் தேதி முதல் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனுடைய செயலிகள், இணையதளம், சமூக ஊடக கணக்குகளில் மத நல்லிணக்கத்தைச் சீா்குலைத்து பிரிவினைவாதத்தை தூண்டிவிடுவதற்கு உரிய அம்சங்கள் உள்ளன. இவை இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, மாநிலத்தின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு தீங்குவிளைவிப்பதாக இருப்பதும் கண்டறியப்பட்டது. தற்போது நடைபெறும் தோ்தல்களின் போது ஆதாயம் பெறும் வகையில், இந்த ஊடகமும், புதிய செயலிகளும், சமூக ஊடக கணக்குகளும் துவக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஒட்டுமொத்த தகவல் சூழலை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு தொடா்ந்து விழிப்புடன் கண்காணித்து வருகிறது எனவும், ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது எனவும் ஒலி பரப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...