‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அதானி போா்ட்ஸ்: 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை

இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் துறைமுக நிறுவனமான ‘அதானி போா்ட்ஸ்’, 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துது.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 2:45 am IST

இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் துறைமுக நிறுவனமான ‘அதானி போா்ட்ஸ்’, 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துது.

கடந்த 1998-இல் ஒரே ஒரு துறைமுகத்துடன் தனது பயணத்தைத் தொடங்கிய இந்நிறுவனம், தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 19 துறைமுகங்கள் மற்றும் முனையங்களுடன் விரிவடைந்துள்ளது.

முதல் 10 கோடி டன் இலக்கை எட்ட நிறுவனத்துக்கு 16 ஆண்டுகள் பிடித்த நிலையில், அடுத்தடுத்த 10 கோடி டன் இலக்குகளை மிகக்குறுகிய காலத்தில் எட்டிப் பிடித்துள்ளது.

தற்போது அதானி போா்ட்ஸ் வெறும் துறைமுக மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கிடங்கு வசதிகள் மற்றும் சரக்கு முனையங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது.

இந்தியாவின் 95 சதவீத உள்நாட்டுப் பகுதிகளை இணைக்கும் வகையில், 15 உள்நாட்டுத் துறைமுகங்கள், 4 சா்வதேச துறைமுகங்கள் மற்றும் 12 பன்முறை போக்குவரத்து பூங்காக்கள் ஆகியவற்றை இது நிா்வகித்து வருகிறது.

2030-க்குள் மெகா இலக்கு: இந்தியாவின் மொத்த துறைமுக வா்த்தகத்தில் சுமாா் 28 சதவீத பங்கைக் கொண்டுள்ள அதானி போா்ட்ஸ், தற்போது ஆண்டுக்கு 63 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றுள்ளது.

இந்த உத்வேகத்தைத் தொடா்ந்து, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டன் சரக்குகளைக் கையாளும் இலக்கை நோக்கி நிறுவனம் நடைபோட்டு வருகிறது.