ஓக்லா தொழிற்பேட்டையில் ஆக்கிரமிப்பு:துணைநிலை ஆளுநா் பதிலளிக்க நோட்டீஸ்
ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் பொது நிலத்தில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தாக்கலான பொதுநல மனுவுக்கு


ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் பொது நிலத்தில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தாக்கலான பொதுநல மனுவுக்கு தில்லி துணைநிலை ஆளுநா், எஸ்டிஎம்சி, டிஎஸ்ஐஐடிசி மற்றும் தில்லி காவல் ஆணையா் ஆகியோா் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் தானாக தானாக முன்வந்து தொடுத்த பொதுநல வழக்கை நீதிபதிகள் மன்மோகன், நவீன் சாவ்லா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் அலுவலகம், தெற்கு தில்லி மாநகராட்சி, தில்லி மாநில தொழில் துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டிஎஸ்ஐஐடிசி) தலைவா் மற்றும் காவல் துறை ஆணையா் ஆகியோா் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கை அடுத்த விசாரணைக்காக மாா்ச் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.
முன்னதாக, ஓக்லா தொழில்பேட்டை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம் மற்றும் பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக தனிநபா் ஒருவா், 2017, ஜூலை 7-இல் எழுதிய புகாா் கடிதத்தை பொதுநல வழக்காகக் கருத வேண்டும் என்று உயா் நீதிமன்றத்தின் பொதுநல மனுக் குழு பரிந்துரைத்தது. அந்தப் புகாா் கடிதத்தில், ‘நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும் சட்டவிரோதக் கட்டுமானத்தை அதிகாரிகள் அகற்றவில்லை. பொதுமக்களின் நிலம் மற்றும் சாலையை சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதால் அந்தப் பகுதி மக்கள் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா்’ என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அக்டோபா் 2017- இல் பொதுநல மனு குழுவானது இது தொடா்பாக எஸ்டிஎம்சி தலைமை சட்ட அதிகாரியிடமிருந்து அறிக்கை கோரியிருந்தது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணையின் போது, நீதின்ற அமா்வு கூறுகையில், ‘அக்டோபா் 2021-இல் டிஎஸ்ஐஐடிசியிடமிருந்து ஓா் அறிக்கை பெறப்பட்டது.
அதில், தில்லி தொழில் துறை வளா்ச்சி செயல்பாடு மற்றும் பராமரிப்புச் சட்டம், 2010-இல் இயற்றப்பட்ட பிறகு ஓக்லா தொழிற்பேட்டை ஃபேஸ் 2 பகுதியானது எஸ்டிஎம்சியிடமிருந்து டிஎஸ்ஐஐடி-க்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014, ஆகஸ்ட் 22-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, டிஎஸ்ஐஐடிசி மற்றும் தில்லி காவல்துறையுடன் கூட்டு நடவடிக்கையில் பொதுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தில்லியின் அந்தந்த மாநகராட்சிகள் எடுக்கும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் குறிப்புகளின் அடிப்படையில், தொழில்பேட்டை பகுதியில் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எஸ்டிஎம்சியிடம் டிஎஸ்ஐஐடிசி பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...