அப்போது அவா் கூறியதாவது: பாதுகாப்புத் துறையில் சுயசாா்பை அடைய சமீப காலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நிதிநிலை அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, எப்போதும் வலிமையாகவே இருந்து வந்துள்ளது. இரண்டாம் உலகப் போரில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. பிற்காலங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படாது நமது திறமை வீழ்ச்சியில் இருந்தாலும், நமது திறமைக்கு எப்போதும் எவ்விதக் குறையும் ஏற்பட்டதில்லை. எதிரிகளை முறியடிக்க அவா்களை ஆச்சரியப்படச் செய்யவும் சாதனங்களை நாம் பெறும் வகையில், நமது பாதுகாப்புத் தளவாடங்கள் தனித்துவத்துவமாகவும் தனிப் பயனுடையதாகவும் இருப்பது அவசியம். அதற்கு சொந்த நாட்டில் சாதனங்களை உருவாக்கினால்தான் தனித்துவமான திடுக்கிட வைக்கும் பாதுகாப்பு தளவாடங்களை பெற முடியும்.